Wednesday, December 22, 2010

அம்பேத்கரை கண்டேன்




சென்னை மினி உதயம் திரைரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.

இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.

திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.

திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரைரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.

படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.

'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.

'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !.

அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரைரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

அம்பேத்கர் திரைப்படம் குறித்து சக பதிவர்களின் பதிவுகள்


நன்றி : கீற்று

7 comments:

  1. அந்த படத்தை நானும் பார்க்க வேண்டும் என்று நினது கொண்டு இருக்கிறான்... கூடிய சிக்கிரம் பார்த்து விடுகிறன்

    ReplyDelete
  2. இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிடுவேன். இந்தப்படம் தமிழில் வெளிவர தோழர் வெ.மதிமாறன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் இதற்காக போராடியே இதை தமிழ்நாட்டில் ஓடவிட்டுள்ளனர். இந்த நேரத்தில் அவர்களை பாராட்டுவது பதிவர்களின் கடமையாகும்.

    அம்பேத்கர் குறிப்பிட்ட ஒரு சாதிக்கான குறியீடு அல்ல. அவர் ஒடுக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக்காகவும் சிந்தித்தவர், உழைத்தவர்.

    அம்பேத்கரை தங்களுடைய குறியீடாக மாற்றிக்கொண்ட அரசியல் வியாபாரிகள் நினைத்திருந்தால் இந்தப்படத்தை குறைந்தது 50 நாட்களாவது தமிழ்நாட்டில் ஓட்டி இருக்கலாம். அதுபற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. காசுக்காக எதையாவது செய்யவேண்டும் அவ்வளவே.

    ReplyDelete
  3. தங்களின் பார்வைக்கு...!
    http://ulagacinema.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  4. அழகான நடுநிலையான விமர்சனம். அதிலும் நீங்கள் படத்தின் விளம்பரத்தினை குறித்து சொன்ன வார்த்தைகள் சரியான சாட்டையடி..

    ReplyDelete
  5. //அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... //

    அம்பேத்க்காருக்கு மட்டும் அல்ல இந்த நிலை தேசத்தில் பல தலைவருக்கும் இந்த நிலை உள்ளது ...
    திருநெல் வேலி ஜாதி சங்க சுவர் விளம்பரங்கள் பாருங்கள் ...எந்த தலைவர் எந்த ஜாதி என்று வெவரம புரியும்

    ReplyDelete
  6. //அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !. //


    எவ்ளோ நாளைக்கு தாண்டா history-யேய் பேசிட்டு இருக்கிறது?? 21-ம் நூற்றாண்டுக்கு வா.. எங்கள் தலைவரின் "இளைஞன்" படம் பார்.. இண்ணைக்கு தேதில 100 நாள் ஓடுன trailer அது தான்.. நிகழ காலம் நல்லா இருக்கும் பொது, ஏன்டா கடந்த காலத்த பத்தி பேசுற?? இவனுக, மேடைக்கு மேடை தங்கள் தலைவர் என்றும் சொல்லும் "பெரியார்" படத்துக்கே ஒரு மயிரும் பண்ணல்ல.. இதெல்லாம் feel பண்ணி பிரயோஜனம் இல்ல.. கேட்டா - தமிழ்-க்கும் நாங்க தான் காவல், திரை துறைக்கும் நாங்க தான் காவல், ஒடுக்க பட்டோருக்கும் நாங்க தான் எல்லாம்ண்ணுவாணுக..

    Coming to your post.. நல்ல விமர்சனம். இது போல் சில விமர்சனங்களை படித்து, நானும் இந்த படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்.. ஆனா படம் பொங்கல் வரைக்குமாவது ஓடுமா?? (கேலிக்காக அல்ல, நிஜம் அது தான்.. Ponga release "kudumba" படங்கள் வெளியிடவே திரைஅரங்குகள் கிடைப்பது அரிது.. ;()

    ReplyDelete
  7. அம்பேத்கர் குறிப்பிட்ட ஒரு சாதிக்கான குறியீடு அல்ல. அவர் ஒடுக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக்காகவும் சிந்தித்தவர், உழைத்தவர்.

    ReplyDelete