Wednesday, March 3, 2010

நித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்


ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.

அரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..

செய்தி 1:

அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:

அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.














செய்தி 2

பிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்

தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.

இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.

சரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...
இந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..

சரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம்??? வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'

சரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.

ஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்???

உண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.

ஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..

நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!